ஆதித்யா எல்-1 விண்கலம், அடுத்த மாதம் இலக்கை அடையும்: இஸ்ரோ தகவல்..!

சனி, 23 டிசம்பர் 2023 (11:05 IST)
சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்ட நிலையில் அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்புகிறது
 
இந்த நிலையில் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம்ம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ள நிலையில் அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
 
 இந்த நிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1  விண்கலம் ஜனவரி 6ஆம் தேதி அதன் இலக்கை அடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  
 
சூரியனின் இலக்கான லெக்ராஞ்சியன் என்ற நிலைப்பள்ளியை ஆதித்யா எல்-1  அடைந்தவுடன் அந்த இடத்திலேயே சுற்றி வந்து சூரியனுக்கு ஏற்படும் நிகழ்வுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்