கோவில்பட்டியில் மதிமுக தொண்டர் ஒருவர் கோயிலுக்கு வந்த தொடரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துள்ளார் வைகோ.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் அவர் போட்டியிடாமல் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக இருந்த விநாயகா ரமேஷை அந்த தொகுதியில் போட்டியிட வைத்தார் வைகோ.
இந்நிலையில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து கோவில்பட்டியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்ய வந்தார் வைகோ. கோவில்பட்டி பத்ரகாளி அம்மன் கோவில் அருகே ஒரு இரு சக்கர வாகனம் வைகோவின் வாகனம் முன்னேறி செல்லமுடியாத வகையில் நிறுத்தப்பட்டிருந்தது.
கோவிலுக்குள் இருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய பக்தரை மதிமுக தொண்டர் ஒருவர் வெளியே அழைத்து வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. திடீரென மதிமுக தொண்டர் அந்த பக்தரை கடுமையாக ஓங்கி அறைந்தார்.
மதிமுக தொண்டர் தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டார் அந்த பக்தர். ஆனால் இந்த சம்பவத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த வைகோ தனது கட்சி தொண்டரை தடுக்கவில்லை. மாறாக தனது கட்சி தொண்டர் பக்தர் ஒருவரை கடுமையாக தாக்குவதை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார்.