திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் தற்போது மதிமுகவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆறு தொகுதிகளிலும் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே சற்றுமுன் இந்தஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் மதுமுகவுக்கு ஒதுக்கிய 6 தொகுதிகள் எவை எவை என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்