மயிலாப்பூர் கோவிலில் இருந்து மாயமான மயில் சிலை… தெப்பக்குளத்தில் தேடுதல்!

புதன், 2 பிப்ரவரி 2022 (10:18 IST)
மயிலாப்பூர் கோவிலில் இருந்த புராதனமான மயில் சிலை திருடப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவன நாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை அங்கிருந்து திருடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அங்கு போலியான சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் 6 வாரத்துக்குள் விசாரணை செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால் இப்போது மயில் சிலை கோயிலுக்கு வெளியே இருக்கும் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் தீயணைப்புத்துறையினரின் உதவியோடு குளத்தில் இறங்கி தேட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்