மயிலாடுதுறையும் போச்சே.. திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் அதிருப்தி..!

Siva

புதன், 27 மார்ச் 2024 (08:33 IST)
திருச்சி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு வழங்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை தொகுதியாவது தனக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசர் அவர்களுக்கு அந்த தொகுதியும் கிடைக்காததை எடுத்து அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
அதேபோல் மயிலாடுதுறை துறையில் மூன்று முறை தொடர்ச்சியாக எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் மணிசங்கர் ஐயர் அவர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த தொகுதியில் பாஜக கூட்டணியின் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் மா.கா. ஸ்டாலின் என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் பாபு போட்டியிடுகிறார் என்பதும் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான காளியம்மாள் என்பவர் இந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நான்கு முனை போட்டியில் சீனியர்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுதா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் ராமலிங்கம் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்