கருணாநிதி மேல் அனுதாபப்படும் தமிழர்களே! அவரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? மார்கண்டேய கட்ஜு கேள்வி

செவ்வாய், 31 ஜூலை 2018 (11:48 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.  
 
பல கருத்து வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் இருந்தாலும்கூட திமுகவை பரம எதிரியாக கருதும் அதிமுக அமைச்சர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இப்படி இருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு  தமிழர்கள் அனுதாபம் காட்டுகின்றனர்.
கருணாநிதி அரசியலில் நுழைவதற்கு முன்பு அவருக்கு சொத்து மதிப்பு எவ்வளவு? தற்பொழுது அவரது துணைவியர், மகன் ஸ்டாலின், மாறன் சகோதரர்கள், கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என கேட்கவேண்டும். காமராஜர் மறைவின்போது அவரது பெயரில் எந்த சொத்தும் இல்லை. என்ன ஒரு என்ன ஒரு வித்தியாசம்! என கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்