சீமானின் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காய்கறி விற்பது, புரோட்டா மாஸ்டர் ஆவது என மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மன்சூர் அலிகானுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது
தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் நாம் தமிழர் வேட்பாளர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.