நாம் தமிழரின் தனித்துப் போட்டி மற்றும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஆகிய முயற்சிகளால் சமூக வலைதளங்களில் அவர்களுக்குப் பாராட்டு கிடைத்து வருகிறது. இதையடுத்து வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
'திராவிடக் கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்கிறார்கள்.. ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் என நான் கேட்கிறேன். உங்களால் ஓட்டுக்கு கொடுக்காமல் உங்கள் வேட்பாளர்களை வெற்றிப்பெற வைக்க முடியுமா ? இவர்கள் நல்லவர்கள் என்கிறார்கள்… பெரியக் கட்சிகள் வேறு ..ஏன் தேர்தலில் தனியாக நிற்கவில்லை… இவர்களால் முதலில் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்ட முடியுமா அல்லது காசு கொடுக்காமல் தேர்தலில் வெற்றிதான் பெறமுடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.