இந்நிலையில் சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் என்றும் மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால், தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது எனவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.