ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கபட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் ஜனவரி 14ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மணிப்பூர் அரசின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் கந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மணிப்பூர் அரசு கருதுகிறது என்றும், யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது எனவும் மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் எனவும், யாத்திரையை தடுக்க மணிப்பூர் அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.