உடல் நிலை சரியில்லாத மகனுடன் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்!

J.Durai
சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:11 IST)
மானாமதுரை சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவருக்கு புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடன் திருமணமாகி 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
 
ஏற்கனவே கணவர் இறந்த நிலையில் தற்சமயம் தனலெட்சுமி தன்னுடைய 7 வயது மகனுடன் மானாமதுரை சாஸ்தா நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனலெட்சுமியின் மகனுக்கு அன்மையில் உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த தனலெட்சுமி தன்னுடைய 7 வயது மகனுடன் சிவகங்கை வந்ததுடன் பேருந்து நிலையம் அருகேவுள்ள தெப்பக்குளத்தில் இறங்கி நடு தெப்பம் வரை தண்ணீருக்குள் நடந்து சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் நடு தெப்பம் நோக்கி செல்வதை கண்ட பொது மக்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியதுடன் உடனடியாக சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனை அடுத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
7 வயது மகனுடன் தாய் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்