ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படும் ஆண்கள்! முதல்வருக்குக் கடிதம்!

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:09 IST)
ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வருக்குக் கடிதம் வந்துள்ளது.

கொரோனா பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே குடும்பப் பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இதையடுத்து பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆண்கள் ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ‘ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் ஆண்களை, குடும்ப வன்முறை விவகாரம் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆண்களின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. சட்டங்களை காட்டி, பல ஆண்களை அவர்களது மனைவிகள் மிரட்டுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நிராயுதபாணியாக உள்ள ஆண்கள் புகார் கொடுக்க முடியாமலும், வெளியில் சொல்லமுடியாத இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்னைகளை தெரிவிக்க, ஒரு ஹெல்ப் லைன் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். ஆண்கள் ஆணையமும் உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்