ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் பிட்டா ராஜேஷ். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவருக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் கொரோனா சோதனை மேற்கொண்ட பிட்டா ராஜேஷுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தனது கொரோனா பாஸிட்டிவ் சான்றிதழை உயர் அதிகாரிகளுக்கு நகல் அனுப்பி விடுமுறை கேட்டுள்ளார். பிறகு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோன பாதிப்பு அதிகமானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.