சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த நபர் - சீமான் டுவீட்

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (18:21 IST)
காஞ்சிபுரம் படப்பை பகுதியைச் சேர்ந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து இன்று உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து,  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

''காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துத் தவிக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்! ''என்று தெரிவித்துள்ளார்.

தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்!https://t.co/p41ScCXOkp@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/a6qzrJ1gt7

— சீமான் (@SeemanOfficial) October 14, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்