தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: சென்னை - மைசூர் இடையே இயக்கம்!
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:36 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் தற்போது வட இந்தியாவில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வந்தே பாரத் சென்னை மைசூர் இடையே இயக்கப் போவதாகவும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை - மைசூர் இடையே 483 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் செல்பவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.