பெண்ணின் ஆபாச புகைப்படத்தை இணையதத்தில் பதிவிட்ட நபர் கைது!
செவ்வாய், 15 மார்ச் 2022 (23:31 IST)
இளம் பெண்ணில் ஆபாசப்புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஹசன்(29). இவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடம் பழகி வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.
அப்பெண் இந்தோனேஷியாவுக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது, அவரது ஆபாச போட்டோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் கேரளாவில் இருந்த ஹசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.