''என்னை மென்மேலும் உழைக்கத் தூண்டுகிறது!''-- அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி

சனி, 2 டிசம்பர் 2023 (21:10 IST)
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு தமிழக அமைச்சர்கள், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறினர். இந்த நிலையில், ''எல்லோரது அன்பும் என்னை மென்மேலும் உழைக்கத் தூண்டுகிறது!'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''அன்பில் மகேஸ் பொய்யாமொழி எனும் மாணவனை மனிதனாக வார்த்தெடுத்த எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  
அவர்களின் வாழ்த்துகளை இந்நாளில் பெற்றுக்கொண்டேன்.
 
2018-ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற கழக மண்டல மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்கள் சேலத்தில் நடைபெறவிருக்கும் கழக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் "தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி" எனும் தலைப்பில் உரையாற்றவும் வாய்ப்பளித்துள்ளார்கள். இப்பெரும் வாய்ப்பினை பிறந்த நாள் பரிசாக எனக்களித்த கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கழக  இளைஞர் அணி செயலாளர் - மாண்புமிகு அமைச்சர்  உதய நிதி  அவர்கள் தனது அன்பை பகிர்ந்துகொண்டார். கழக முதன்மைச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களின் வழிகாட்டுதலும், கழகத்தின் இரும்பு சிப்பாய்களாகக் களமாடும் தொண்டர்களின் அரவணைப்பும், மாணவச் செல்வங்கள் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களின் அன்பும் என்னை மென்மேலும் உழைக்கத் தூண்டுகிறது!
 
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..." என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்