சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்ல 4 நாட்கள் தடை.. என்ன காரணம்?

Mahendran

வெள்ளி, 10 ஜனவரி 2025 (18:12 IST)
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை காண வரும் பக்தர்கள் பெருவழி பாதை வழியாக செல்ல நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக தெரிகிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வரும் நிலையில், இன்று மாலை வரை மட்டுமே பக்தர்கள் பெருவழி பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு, 14ஆம் தேதிக்கு பிறகு தான் பெருவழிப்பாதை பக்தர்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாளை முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லலாம் என்றும் பம்பையில் இருந்து மட்டுமே சன்னிதானத்திற்கு செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், பம்பையில் பக்தர்கள் வாகனத்தை நிறுத்தவும் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்