மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (18:18 IST)
மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 
 
சென்னையில் குறிப்பாக கனமழை பெய்து வருவதால் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முடிச்சூர் பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மதுராந்தகம் ஏரி நிரம்பியது. மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் கொள்ளளவு 23.30, அதில் 20.50 அடியை எட்டியுள்ளது. 
 
தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்து கண்காணிப்பில் இருப்பதாகவும், மழை நீர் சூழ்ந்த உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்