கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்: கொரோனாவால் பரிதாபம்

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:45 IST)
கரும்புச்சாறு விற்பனை செய்யும் கப்பல் ஊழியர்
அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தற்போது மதுரையில் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார் 
 
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கப்பலில் பணி புரிந்து வந்தவர் மதுரையைச் சேர்ந்த சரவணன். கப்பலில் உள்ள கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கிடைத்த விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதன் பின் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் அவர் அமெரிக்காவுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது
 
இந்த நிலையில் வேலையின்றி வருமானம் இன்றி இருந்த சரவணன் மதுரையில் நடமாடும் கரும்புச்சாறு கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கரும்புச்சாறு கடை மூலம் தனக்கு தினமும் 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் இதை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார் 
 
இனிமேல் அமெரிக்கா செல்லப் போவதில்லை என்று கூறிய சரவணன் மதுரையிலேயே மேலும் பல கிளைகளை உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்