இலவசம் வழங்கும் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது? – மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (15:34 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் “இலவசங்கள் வழங்கி மக்களை சோம்பேறியாக்காமல் நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். சமூக நல திட்டம் என்ற பெயரில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் “பிரியாணி, மதுபாட்டிலுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறார்கள். வாக்குகளை விற்பனை செய்தால் நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்