மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்து : ரூ.5 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வியாழன், 10 நவம்பர் 2022 (17:23 IST)
மதுரை மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கருமாத்தூர் செல்லும் வழியிலுள்ள அழகுசிறை என்ற கிராமத்தில் விபிஎம்  பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலையில் இன்று  திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு, இதில், 5 பேர் பலியாகினர். மேலும், 13க்கும் மேட்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பட்டாசு வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள   நிலையில்,  பட்டாசு வெடி விபத்தில், மதுரை மாவட்டம், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகிகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’ மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

செய்தி அறிந்தவுடன்.  மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்களை மீட்புப் துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பணிகளை இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக்கொள்வதோடு ஆறுதல்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் தலா ஐந்து இலட்சம் ரூபாய்,  நிதியிலிருந்து வழங்கவும் பொது நிவாரண உத்தரவிட்டுள்ளதாகத் ‘’தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்