அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன நிலையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.