இந்த காலத்துலயும் இப்படியா? ஒதுக்கி வைக்கப்பட்ட 25 குடும்பங்கள்! – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (16:23 IST)
கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”இந்த காலத்துல எல்லாம் யார் சார் சாதி பாக்குறா?” என்று வெளியே கேட்டுக் கொண்டாலும் தொடர்ந்து சொந்த சாதிக்குள் திருமணம் செய்யும் முறையும், கட்டுப்பாடும் இன்னும் பல கிராமங்களிலும் கட்டுக்கோப்பாக பின்பற்றப்படுவதாக உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு தள்ளி வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் உள்ள நல்லூர் கிராமத்திலும் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் சாதி பார்க்காமல் கலப்பு மணம் செய்த சுமார் 25 குடும்பங்களை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். கோவில் திருவிழாக்களுக்கு கூட அவர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 25 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, கலப்பு திருமணம் செய்த 25 குடும்பங்களிடமும் தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்