மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் கிளையில் உள்ள மும்பை உயர் நீதிமன்றம், மனைவியை சுத்தியலால் அடித்து கொன்று, மகளின் கண்முன்னே தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.
2017 அக்டோபர் 5ஆம் தேதி நடந்த சண்டையின்போது, பைனாடே என்பவர் தனது மனைவி கல்பனாவை சுத்தியலால் தாக்கியுள்ளார். தாயின் அலறல் கேட்டு எழுந்த மகள், சுத்தியலுடன் நிற்கும் தந்தையையும், வாய், மூக்கு மற்றும் தலையில் இருந்து இரத்தம் வழிய கிடந்த தாயையும் பார்த்துள்ளார். மனைவி இறந்ததால் அதிர்ச்சி அடைந்த பைனாடே தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
கல்பனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பைனாடே உயிர் பிழைத்து கொண்டார். அவர் மீது விசாரணை நடந்த நிலையில் விசாரணையில், பைனாடே தற்காப்புக்காக தாக்கியதாக கூறியதை நீதிபதிகள் நிராகரித்தனர். க
மேலும் மகள் அளித்த முக்கிய வாக்குமூலம் வழக்கை ஆதரிக்காவிட்டாலும், மற்ற அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், பைனாடேவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.