இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 2.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தில் உயர்மட்ட குழு அமைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் சென்னையில் 57,366 தெரு நாய்கள் இருந்தன. 2024ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 1.81 லட்சமாக உயர்ந்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் முதியோர்களை தெரு நாய்கள் தாக்குவதில் இருந்து பாதுகாக்க, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதற்கு புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரண்டு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.