மீண்டும் பரவும் ‘மெட்ராஸ் ஐ’: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்..!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:31 IST)
மெட்ராஸ் ஐ என்று கூறப்படும் கண் நோய் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது தோன்றும் நிலையில், தற்போது மீண்டும் மெட்ராஸ் ஐ தமிழகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. ]
 
இது ஒரு தொற்று நோய் என்றும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் மிக எளிதில் மற்றவருக்கும் பரவிவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கண் சிவப்பு கண் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் தோன்றும் இந்த நோய் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் அனைத்து அடுத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்