பாபநாசம் படம் பார்த்து பக்கா பிளான் போட்ட மதன்...

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (12:01 IST)
கடிதம் எழுதி விட்டு தலைமறைவாகிப் போன வேந்தர் மூவிஸ் மதன், திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் கடந்த திங்கட்கிழமை சிக்கினார்.


 

 
உத்தரகாண்ட், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த மதன், கடந்த ஜுலை மாதத்தில் திருப்பூரில் உள்ள வர்ஷா பெண்ணின் பங்களாவில் சென்று தங்கியுள்ளார். 
 
அந்த பங்களாவில், மதன் பதுங்கியிருப்பதற்காக, சகல வசதிகளுடன் கூடிய ஒரு ரகசிய அறையை வர்ஷா கட்டியிருந்தார். அதில் பதுங்கியிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
 
இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
அதாவது, போலீஸ் தன்னை எப்படியும் மோப்பம் பிடித்து இங்கே வந்து விடும் என்று கணக்குப் போட்ட மதன், திருப்பூரிலிருந்து வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக பாபநாசம் போன்ற சில திரைப்படங்களை பார்த்து, சென்னையில் இருந்து வெளி மாநிலங்களில் எங்கெங்கு செல்வது? எப்படி செல்வது? எங்கு சென்று தங்குவது? என்று திட்டம் திட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
ஆனால், அதற்குள் போலீசாரிடம் அவர் சிக்கிவிட்டார்.
அடுத்த கட்டுரையில்