நைட்டியில் மன்மதனாக இருந்த மதன் கைதான பரபரப்பு நிமிடங்கள்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (14:56 IST)
எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தலைமறைவான வேந்தர் மூவீஸ் மதன் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். இவர் சினிமா படம் ரேஞ்சுக்கு கைது செய்யப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.


 
 
காசிக்கு சென்று கங்கையில் சமாதியாக போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு போன மதனை பிடிக்க தமிழக காவல்துறை பெரிதும் சிரமப்பட்டது. பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்க தனிப்படைகள் அமைத்து மதனை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியது காவல்துறை.
 
காவல்துறையின் நடவடிக்கையால் மதனின் கூட்டளிகளான நண்பர்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். அதே சூழலில் மிகவும் ஆடம்பரமாக காவல்துறைக்கு தெரியாமல் மறைமுகமாக மதன் உத்தரகண்டில் சொந்தமாக வீடு வாங்கி வாழ்ந்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய பெண் தோழி வர்ஷாவின் வீட்டில் திருப்பூரில் குடிபெயர்ந்தார் மதன். அந்த ஆடம்பர பங்களாவில் வாழ்ந்து வந்த மதன் பகலில் வெளியே எங்கேயும் செல்லாமல் இரவில் விலை உயர்ந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து உலா வந்துள்ளார்.
 
இந்த தகவல் காவல்துறைக்கு கிடைக்க வசமாக மதனை பிடிக்க திட்டமிட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க பகலில் எந்த நடமாட்டம் இல்லாமல் இருக்கும் இரவில் மட்டும் மதன் நடமாடுவது தெரிய வந்தது. இந்நிலையில் திங்கள் அதிகாலை மதன் வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைவதை பார்த்த காவல்துறை அதிரடியாக அந்த பங்களா வீட்டில் நுழைந்தது.
 
வீடு முழுவதும் தேடியும் மதனை காணமுடியாமல் காவல்துறையினர் திகைத்தனர். அந்த வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்த போது மதன் யாரென்றே தனக்கு தெரியாது எனவும் இங்கு யாரும் இல்லை எனவும் உறுதியாக இருந்துள்ளார்.
 
இந்நிலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதனின் கூட்டாளிகள் மூலம் மதனின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வைத்துள்ளனர். பின்னர் மதனின் மொபைல் ஐஎம்இஐ நம்பர் மற்றும் மொபைல் நம்பர் மூலம் அந்த குருஞ்செய்தி அந்த வர்ஷாவின் வீட்டில் உள்ளே தான் ரிசீவ் ஆகியிருப்பது தெரியவந்தது.
 
இதனையடுத்து மதன் இங்குதான் எங்கேயோ இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் பெண் காவலர்கள் மூலம் வர்ஷாவிடம் தங்கள் விசாரணை முறையை மாற்ற மதன் இங்குதான் இருப்பதை ஒப்புக்கொண்டார் வர்ஷா.
 
படுக்கையறையால் தான் மதன் இருப்பதாக கூறினார் ஆனால் அங்கும் மதன் இல்லாததால் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர் போலீசார். பின்னர் அந்த அறையில் உள்ள அலமாறியின் பின்னே ஒரு ரகசிய அறை உள்ளது அதில் மதன் இருப்பதாக கூறினார் வர்ஷா. அலமாறியை நகர்த்த முயன்றபோது அதனை நக்ர்த்த மிகவும் சிரமப்பட்டனர் காவல்துறையினர்.
 
கடப்பாறை மூலம் அதனை நகர்த்தும் முயற்சியில் இறங்கினர் காவலர்கள் ஆனால் எதிர் முனையில் யாரோ முட்டுக்கொடுத்து அதனை திறக்க விடாமல் தடுப்பதை உணர்ந்த போலீசார் ஒருவழியாக தீவிர முயற்சிக்கு பின்னர் அதனை திறந்த போது அங்கு மதன் நைட்டியுடன் சுருண்டு படுத்திருப்பதை கண்டனர். அதன் பின்னர் மதனை கைது செய்து சென்னை கொண்டு சென்றனர். ஒரு சினிமா படத்தை போலவே நடந்துள்ளது மதனின் கைது.
அடுத்த கட்டுரையில்