தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை வேறு தொடங்கி விட்டதால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி இருக்கும். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் டெங்கு சிகிச்சைக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள் கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 493 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனக் கூறியுள்ளார்.