சென்னையில் நேற்று விடிய விடிய முக்கிய பகுதிகளில் மழை பெய்தது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மேலும் சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூரில் இன்று இடியுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.