ரெம்டெசிவிர் வரவு அதிகரிப்பு… மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்!

திங்கள், 17 மே 2021 (08:05 IST)

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக வெளியாகியுள்ள அறிக்கையில் ‘தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று (மே 16) ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வழங்கி வரும் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்தினை தற்போது 20,000 ஆக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதல்வர் தெரிவித்துள்ளார். கொடிய கொரோனா தொற்றினை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாததுஎனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்