இன்று சென்னை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Siva

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (09:04 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படும் சென்னை தினத்தை, சென்னை மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்புமிக்க நாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் "எந்தெந்த மூலைகளில் இருந்தும் நண்பர்களை அளித்து, வாழ வழி தேடுவதற்கு நம்பிக்கையும் அளித்து, பல பெண்களுக்கு பறக்க சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரின் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சிறப்புமிக்க சென்னைக்கு அகவை 386!" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதய துடிப்பு" என்று கூறி, "வணக்கம், வாழவைக்கும் சென்னை" என தனது பதிவை நிறைவு செய்துள்ளார். இந்த வாழ்த்து, சென்னை நகரின் வளர்ச்சிக்கும், அதன் கலாச்சாரத்திற்கும், மக்களுக்கு அது அளிக்கும் வாழ்வாதாரத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
 
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி, சென்னப்ப நாயக்கரிடம் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கியது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது சென்னை நகரின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் போற்றும் ஒரு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்