மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது - மீண்டும் மு.க. அழகிரி

புதன், 27 டிசம்பர் 2017 (11:12 IST)
மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக உள்ளவரை திமுக வெற்றி பெறாது என மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

 
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற வேண்டும்.  அதை தினகரன் செய்தார். அவரது குழு நன்றாக களப்பணி ஆற்றினார்கள். அதனால் அவர் வெற்றி பெற்றுள்ளார். 

 
காசு கொடுத்து ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஸ்டாலினுடன் கூட இருப்பவர்கள் சரியில்லை.  அதனால்தான், தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக, திமுக இரண்டு கட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தினகரனுக்கு ஓட்டு போட்டுள்ளனர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணநாயகம், ஜனநாயகம் என பேசுகிறார்கள்.
 
நான் எந்த தவறும் இல்லை. ஆனால், கட்சியை விட்டு நீக்கினர். திமுக வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் எனில் மாற்றம் தேவை. கட்சியில் புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்” என அவர் காட்டமாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்