ஜெய்ராம் தாக்கூர் ஹிமாச்சல் முதல்வராக இன்று பதவியேற்கிறார்

புதன், 27 டிசம்பர் 2017 (08:08 IST)
ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பாஜக வின் மூத்த தலைவரான ஜெய்ராம் தாக்கூர்(52) இன்று பதவியேற்கிறார்.
சமீபத்தில் குஜராத் மற்றும் ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில், உறுப்பினா்கள் அனைவரும் ஒருமனதாக விஜய் ரூபானியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தனர். இந்நிலையில் காந்திநகர் சச்சிவாலயா திடலில் குஜராத் முதல்வராக விஜய் ருபானி முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். 
 
ஹிமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44 தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஹிமாச்சல் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார். இன்று காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்