இதேப்போல சோளக்காட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் இருட்டில் அவர்களின் அசைவைப் பார்த்து பன்றி என நினைத்து சோளக்காட்டின் உரிமையாளர்கள் சண்முகம் மற்றும் சின்னசாமி ஆகியோர் சுட்டுள்ளனர். இதில் ஆறுமுகத்தின் உடலுக்குள் பாய்ந்த குண்டு ராதாவின் மேலும் பட்டுள்ளது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ராதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ஆறுமுகத்தின் உடலை ரயில் பாதையில் போட்டு தற்கொலை போல மாற்றியுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்துக்கும் சண்முகம் மற்றும் சின்னசாமிக்கும் இடையில் ஏற்கனவே முன்பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.