ஒத்த செருப்பு இது படம் அல்ல, பக்தர் காணிக்கையாக படைத்த நிகழ்ச்சி !

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (20:06 IST)
ஒத்த செருப்பு இது படம் அல்ல, பக்தர் ஒருவர் காணிக்கையாக படைத்த நிகழ்ச்சி கரூரில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது - கரூரில் பெருமாள் சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கையாக வழங்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் காலம் காலமாக ஒத்த செருப்பு என்கின்ற செம்மாளி செய்து கரூர் தாந்தோணிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண  பெருமாள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்த வருடமும் சுவாமி தங்கள் கனவில் வந்து இந்த அளவுடைய ஒத்த செருப்பு செய்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று சொன்னார்.  அதன் அடிப்படையில் பெருமாளின் பாதத்தினை  தோல்  எடுத்து  ஒத்த  பாதம் செருப்பு 70 இன்ச் அளவிற்கு  செய்து அதை ஊர்வலமாக கரூர் நகரின் முக்கியவீதிகளின் வழியாகவும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் பல்வேறு ஆலயங்களின் வழியாக   எடுத்து கொண்டு  சென்று தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில்  அவர் பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

மேலும், இந்த காணிக்கை செலுத்தியதோடு, பெருமாள் ஆசிர்வாதம் பெற்றார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியது.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்