கோவில் சிலைகள், சொத்துக்கள் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

வெள்ளி, 1 ஜூலை 2022 (17:42 IST)
கோவில் சிலைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. 
 
கோவில் சொத்துக்கள் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோவில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று கூறியுள்ளது
 
மேலும் கோவில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன என அறநிலையத்துறை விளக்கம் அளித்த நிலையில் கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்க கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்