தமிழகத்தில் நேற்று முன்தினம் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தடியடி நடத்தினர்.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சில இடங்களில் மட்டுமே அமைதியாக போலீஸ் அவர்களை கலைத்தனர். பெரும்பாலான இடங்களில் தடியடி நடத்தினர். இதில் பெண்கள், கர்ப்பினி, மாணவர்கள், இளைஞர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தொடர்ந்து தமிழ் பொறுக்கிகள் என கூறி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கட்டுப்பாடு இல்லாமல் தமிழர்களை சீண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து நேற்று அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் மெரினாவில் உள்ள பொறுக்கிகளை விரட்ட சிவபெருமான்தான் போலிஸை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
அவரது பதிவில், தைரியம் இருந்தால் மெரினாவிற்கு வருமாறு பொறுக்கிகள் என்னை அச்சுறுத்தினார்கள். சிவபெருமான் போலிஸை அனுப்பினார், பொறுக்கிகள் ஐய்யோ, ஐய்யோ என அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தற்போது பொறுக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருமாறு கூறுகிறார்கள். சிவபெருமான் முடிவு செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.