புதைச்சாலும் சரி எரிச்சாலும் சரி... காத்திருக்கனும்... சென்னையின் கோர முகம்!

புதன், 12 மே 2021 (09:26 IST)
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் உடல்களை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 29,272 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 29,272 பேர்களில் 7,466 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 298 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 16,178 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் உடல்களை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது.
 
ஒரு உடலை எரியூட்ட சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் ஆகிறது. எனவே, சுடுகாட்டின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சென்னை அம்பத்தூர் மின்மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்