மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு! – சிவகங்கையில் பரபரப்பு!

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (10:40 IST)
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் சிவகங்கை பகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் சுயேட்சை கவுன்சிலர்கள் மற்றும் மற்ற கட்சி கவுன்சிலர்களை கடத்துவது போன்ற சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

தற்போது மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் திருபுவனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்