வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

Mahendran

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (15:06 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை உட்பட தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
 
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், கோவை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திடீர் மழைப்பொழிவு, கடும் வெப்பத்தால் வாடும் மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்