சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று காலை 10 மணி வரை இந்த மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்லவும்.
இந்த மழைப்பொழிவு, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு நன்மை பயக்கும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.