பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு..!

Siva

வியாழன், 23 மே 2024 (09:38 IST)
சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலை பேசி அழைப்பில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் எடுத்துள்ளதை அடுத்து அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் தற்போது ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அவர் பிரச்சாரத்தில் பேசிய சில கருத்துக்களை எதிர்க்கட்சியினர் திரித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு இந்தியில் பேசியதாகவும் அவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை காவல் துறை இது குறித்து விசாரணை செய்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்