நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Prasanth Karthick

புதன், 22 மே 2024 (10:55 IST)
தனியார் தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி தான் மனிதர்களை போல பிறக்கவில்லை என்றும், கடவுளால் அனுப்பப்பட்டதாகவும் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.



இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி இந்த தேர்தலிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான வாரணாசியிலேயே போட்டியிடுகிறார்.

சமீபத்தில் இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக வாரணாசி கங்கை நதியில் நீராடி பூஜை செய்த பிரதமர் மோடி, தான் கங்கை நதியை தாயாக பார்ப்பதாகவும், தன் தாயின் இழப்பிற்கு பிறகு கங்கை தன்னை மகனாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் உணர்ச்சி மிகுந்து பேசியிருந்தார்.

ALSO READ: ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

இந்நிலையில் தற்போது ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் பேசிய பிரதமர் மோடி “நான் உயிரியல்ரீதியாக ஒரு மனிதனாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பரமாத்மாதான் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தன்னை ஒரு துறவு நிலையிலும், கடவுளின் தூதுவன் என்ற வகையிலும் கட்டமைத்து வருவது அவர் மன மாற்றங்களின் அறிகுறியா அல்லது தேர்தல் சமயம் என்பதாலா என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு பரபரக்கத் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்