தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களிடம் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 2700 பேர் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். அதில் 600 பேர் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.