தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது.
சட்டம் ஒழுங்கு பற்றி மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வரும் திமுக அமைச்சர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.