கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரிய வரும். சிசார்டில் நடைபெர்று வரும் கூட்டத்தில் 123 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளதாக அமைச்சர் விஜய்பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.