விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு: கே.எஸ். அழகிரி பேட்டி

திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:10 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் விவசாயிகளின் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டது என கூறப்பட்ட நிலையில் அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் இருந்து மட்டும் 1329 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் தஞ்சை திருச்சி கும்பகோணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 2,400 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியபோது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிக கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் விவசாயக் கடன் தள்ளுபடியில் கூட முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் அதிகபட்சமாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் பாரபட்சமாக குறைந்த அளவே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்