தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட தகவலின் படி, 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே 7ஆம் தேதி தொடங்குகிறது.
மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஜூன் 6ஆம் தேதிவரை மட்டுமே இருப்பதால், விருப்பமுள்ளவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து, கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை பணிகள் படிப்படியாக நடைபெற உள்ளன.